» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை என வதந்தி: புகார் அளிக்க முடிவு!

வியாழன் 21, நவம்பர் 2024 11:39:22 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என வதந்தி பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதனைத்தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடிக்கலாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவித்துள்ளார்.

இதனிடையே நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும், வதந்தி பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory