» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
புதன் 20, நவம்பர் 2024 4:22:29 PM (IST)
நெல்லை, குமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக வருகிற 23-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
BalamuruganNov 20, 2024 - 09:35:08 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி வ உ சி துறைமுக காக்காசெட் லேபர் காலணிவழியாக செல்லும் வெள்ளநீர் பாதை இன்னும் சீரமைக்கபடாமல் உள்ளது இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பிரிட்ஜ் வாஷிங்மெஷின் டிவி மற்றும் பொருட்களை கட்டிலில் தூக்கிவைத்துள்ளனர் மேயர் இது குறித்தும் ஆய்வு செய்யவேண்டும். மேலும் குளங்கள் உடைந்து வெள்ளம் வரும் நிலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக ஊரில் உள்ள ஆலயங்களின்,சர்ச்சின், மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கவேண்டும்.
SelvarajNov 21, 2024 - 06:39:40 AM | Posted IP 172.7*****