» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)
திருநெல்வேலி அருகே பெண்ணைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து, 29 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
கடந்த 18.04.2026 அன்று, முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஆர்.டி. (IRT) பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறமுள்ள குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத நான்கு பேர், வீட்டிலிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டுத் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் உத்தரவின் பேரில், சேரன்மகாதேவி உட்கோட்டத் துணை கண்காணிப்பாளர் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவா (26), வீரசங்கிலி (20), இசக்கிமுத்து (21) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 29 சவரன் தங்க நகைகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன.
வழக்குப் பதிவு செய்த சில நாட்களிலேயே குற்றவாளிகளைக் கண்டறிந்து, கொள்ளை போன நகைகளை மீட்ட டி.எஸ்.பி. அண்டோ ஆரோக்கியராஜ் மற்றும் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினரை, மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)


