» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)
திருச்சி-பாலக்காடு இடையிலான ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 16843) வருகிற 30-ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் (மே) 1, 2, 4 5-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயிலானது திருச்சி-எழமனூர் வரை மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது முன்பதி வில்லா சிறப்பு ரயிலாக எழமனூரில் இருந்து பாலக்காடு செல்லும். இந்த ரயில் அடுத்த மாதம் 2, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-முத்தரசநல்லூர் வரை மட்டும் இயங்கும். முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக முத்தரசநல்லூரில் இருந்து பாலக்காடு வரை இந்த ரயில் செல்லும்.
ரயில்களின் சேவையில் மாற்றம்
இதேபோல் மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் ரோடு- அம்பாதுரை இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16848) அடுத்த மாதம் 3, 4, 5, 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்துசெல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 17070) அடுத்த மாதம் 8-ஆம் தேதி மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)


