» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த வங்கி ஊழியரின் குடும்பத்தினருக்கு, வட்டியுடன் சேர்த்து ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கலக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அஜின் (26), அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, அஜின் தனது மோட்டார் சைக்கிளில் நெடுவிளை கிறிஸ்து அரசர் ஆலயம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், உயிரிழந்த அஜினின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.30,14,792-யை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். மேலும், இந்தத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)


