» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பாஜக மூத்த தலைவரும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கினைப் பதிவு செய்த எம்.ஆர். காந்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் ஆணையம் இந்த முறை எந்த ஒரு ஏற்பாட்டையும் ஒழுங்கான முறையில் செய்யவில்லை. பல இடங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகக் கிடைக்கவில்லை. தேர்தல் நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலுள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும், வாக்காளர்களுக்கு விரைவாக வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலின் போது ஒரு சட்டமன்ற உறுப்பினரே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தப்பட்டவை:
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)


