» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில்' முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தபால் துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்' கீழ், ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் கணக்குத் தொடங்கி பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் அவர்களது கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது.
மோசடி அம்பலம்:
தங்களது கணக்குப் புத்தகத்தைச் சரிபார்க்க வந்த சில வாடிக்கையாளர்கள், தாங்கள் செலுத்திய தொகைக்கும் தபால் நிலைய கணினிப் பதிவேட்டில் உள்ள தொகைக்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தபால் நிலைய ஊழியர்கள் சிலர், வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, கணக்கில் ஏற்றாமல் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தபால் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் முகாமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் செல்வமகள் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட அனைத்து ரசீதுகளும், கணினிப் பதிவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
சந்தேகத்திற்குரிய பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்களிடம் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முழுமையான தணிக்கைக்குப் பின்னரே சரியான தொகை எவ்வளவு என்பது தெரியவரும்.
தபால் நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கும் என நம்பிச் சேமித்த பணத்தில் கைவரிசை காட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் ஆய்வு!
சனி 20, ஜூன் 2026 12:48:36 PM (IST)

மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்த தூத்துக்குடி பெண் கைது: அரசுப் பேருந்தில் பரபரப்பு!
சனி 20, ஜூன் 2026 8:21:30 AM (IST)

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்கக் கோரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:08:26 AM (IST)

திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)


