» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருட்டு வழக்கில் 3 குற்றவாளிகளுக்குக்கு தலா 6 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு
சனி 25, ஏப்ரல் 2026 10:10:05 AM (IST)
தூத்துக்குடி அருகே நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்குக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடந்த 2020ம் ஆண்டு புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே தண்ணீர் பந்தல் to அரசடிபனையூர் வழியில் உள்ள ஒரு தனியார் குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 85 பட்டாணி பருப்பு மூடைகளை திருடிச் சென்ற வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (35/26), ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்களான பரமசிவன் (35/26) மற்றும் அந்தோணி ராஜ் (35/26) ஆகிய மூன்று பேரையும் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ்எதிரிகளான மாரிச்செல்வம் பரமசிவன் மற்றும் அந்தோணி ராஜ் ஆகியோரை குற்றவாளிகள் என உறுதி செய்து குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றதற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2,000/- அபராதமும், குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாணி மூடைகளை திருடியதற்காக தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் வேல்முருகன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் தளவாய்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

