» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு நடைபெற்று வரும் சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.67.81 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், உத்தரவின் பேரில், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள்
இன்று வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் கைப்பற்றப்பட்ட விவரங்கள் வருமாறு:
ரொக்கப் பணம்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத்தொகை – ரூ.67,81,375/-
மதுபானங்கள்: பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மொத்த மதிப்பு – ரூ.4,30,823/-
போதைப்பொருட்கள்: பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு – ரூ.7,36,890/-
இதனிடையே தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் அருகே, கண்காணிப்புக் குழு அதிகாரி வளர்மதி தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.98,000 ரொக்கப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முத்தையாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சேகர் (40) என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.98,000 ரொக்கப் பணத்தை, பறக்கும் படை அதிகாரிகள் தூத்துக்குடி வட்டாட்சியர் (தாசில்தார்) மற்றும் துணைத் தேர்தல் அலுவலர் திருமணி ஸ்டாலினிடம் முறையாக ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சனி 4, ஏப்ரல் 2026 5:16:41 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)

