» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)
இரணியல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பட்டன்விளை பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் கண்ணாட்டுவிளை சிவசக்தி கோவில் ஆகியவற்றில் பித்தளை விளக்குகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் திருடப்பட்டன. மேலும், திங்கள்நகர் பகுதியில் தமிழ்செல்வி என்பவரது வீட்டில் ஒரு பவுன் தங்க நகையும் திருடு போனது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த இரணியல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த டேவிட்ராஜ் (27) என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், திருடிய நகையை ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (48) என்பவரிடம் கொடுத்து, தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தது தெரியவந்தது. அவரிடமிருந்த நகை மற்றும் கோவில்களில் திருடப்பட்ட பித்தளைப் பொருட்களைப் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட டேவிட்ராஜ் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

