» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

கன்னியாகுமரியிலிருந்து திருப்பதிக்கு, நவீன வசதிகளுடன் கூடிய விரைவுப் பேருந்து சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.
தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு, நவீன வசதிகளுடன் கூடிய விரைவுப் பேருந்து சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. இந்தப் பேருந்தில் இருக்கை மற்றும் படுக்கை என இரண்டு வசதிகளும் உள்ளதால் பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தப் பேருந்து முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் பின்வரும் வழித்தடத்தில் இயங்குகிறது:
கன்னியாகுமரி ➔ நாகர்கோவில் ➔ திருநெல்வேலி ➔ கோவில்பட்டி ➔ விருதுநகர் ➔ மதுரை ➔ திருச்சி ➔ திருக்கோவிலூர் ➔ திருவண்ணாமலை ➔ வேலூர் ➔ சித்தூர் ➔ திருப்பதி.
நேர விவரம்:
கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் நேரம்: மதியம் 2:00 மணி (14:00)
திருப்பதியிலிருந்து புறப்படும் நேரம்: மதியம் 2:45 மணி (14:45)
பயண கட்டணம்
இருக்கை கட்டணம் : பெரியவர்கள்: ₹855 குழந்தைகள்: ₹430
தூங்கும் கட்டணம் : பெரியவர்கள்: ₹1295 குழந்தைகள்: ₹648
பயணிகள் தங்களின் பயணத்தை எளிதாக்க www.tnstc.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நீண்ட தூரப் பயணம் என்பதால் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)


