» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தொடர் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நெல்லையிலிருந்து எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 12632) நாளை (ஏப்ரல் 6) முதல் வரும் 21-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், ராமேசுவரத்திலிருந்து எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 16752) நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ஐதராபாத்திலிருந்து வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12760) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12661), வரும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்திலிருந்து இரவு 8:05 மணிக்குப் புறப்படும். சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் (வண்டி எண்: 16751), வரும் 7-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திலிருந்து இரவு 9:05 மணிக்குப் புறப்படும். மேலும், தாம்பரத்திலிருந்து ஐதராபாத் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 12759) நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6:20 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சனி 4, ஏப்ரல் 2026 5:16:41 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)

