» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி தொகுதி த.வெ.க., வேட்பாளர் ஸ்ரீநாத் வேட்புமனுத் தாக்கல்!

சனி 4, ஏப்ரல் 2026 12:09:29 PM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீநாத், இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

மனுத் தாக்கலுக்கு முன்னதாக, தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து வேட்பாளர் ஸ்ரீநாத் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டார். நகரின் பிரதான சாலைகள் வழியாக வந்த இந்த ஊர்வலம், தேர்தல் அலுவலகத்தைச் சென்றடைந்தது. தவெக தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுடன் வேட்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம், ஸ்ரீநாத் தனது வேட்புமனுவை முறைப்படி வழங்கினார். வேட்பாளர் ஸ்ரீநாத்துக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வசிந்த்ரா ரோச் (40), தனது மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது தவெக மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், தொழிலதிபர் கிஷோர்,வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஏசுதாசன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கோல்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

வேட்பாளர்Apr 4, 2026 - 03:08:04 PM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory