» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் மீனவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு!

சனி 4, ஏப்ரல் 2026 8:32:11 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட மீனவர் ஒருவரை, மர்ம நபர்கள் இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ஜாய் விக்டோரியன் (32), ஒரு மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு திரேஸ்புரம் குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் இருவர் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பொது இடத்தில் மது அருந்துவதை ஜாய் விக்டோரியன் கண்டித்ததுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் இருவர், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜாய் விக்டோரியனைச் சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் ஜாய் விக்டோரியனை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஜாய் விக்டோரியன் அளித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய அந்த இரண்டு மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திரேஸ்புரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

TamilanApr 4, 2026 - 11:57:29 AM | Posted IP 162.1*****

No Police Patrolling

IndianApr 4, 2026 - 09:56:51 AM | Posted IP 162.1*****

No proper police security in Thoothukudi.

தமிழன்Apr 4, 2026 - 09:11:44 AM | Posted IP 104.2*****

காரணம் "மது அருந்துதல் " வாழ்க டாஸ்மாக் , வாழ்க திராவிடம், வாழ்க சுசாராய ஓனர் திராவிட குடும்ப ஆலைகள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory