» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்

வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)



சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள 460 புதிய சிசிடிவி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தொடங்கி வைத்தார். 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தவும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் இவற்றைத் தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், 100 சதவீத வாக்குப்பதிவு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப. உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 460 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உட்கோட்ட வாரியாகப் பொருத்தப்பட்ட கேமராக்களின் விவரம்:

    தூத்துக்குடி நகரம்: 58

    தூத்துக்குடி ஊரகம்: 114

    திருச்செந்தூர்: 52

    சாத்தான்குளம்: 29

    ஸ்ரீவைகுண்டம்: 59

    மணியாச்சி: 24

    கோவில்பட்டி: 73

    விளாத்திகுளம்: 51

திருச்செந்தூரில் தொடக்க விழா

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரிகுடியிருப்பு பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இன்று தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், "நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்; 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காவல்துறையினருக்கு உத்தரவு

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என எஸ்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்தந்தப் பகுதி பொதுமக்களிடம் தேர்தலின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் திருச்செந்தூர் உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், தேரிகுடியிருப்பு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

BabuApr 3, 2026 - 06:49:20 PM | Posted IP 172.7*****

nera ara manda thalayanua vandila number plate ilama suthuranuga avanuga kai kala kavanichu vita nanga road la nimathiya poga mudiyum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory