» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் 6,504 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு: 1,448 குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
திங்கள் 9, மார்ச் 2026 11:18:05 AM (IST)

குமரி மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் கடல் ஆமை முட்டைகளைப் பாதுகாப்பது குறித்து வனத்துறை அதிகாரி அன்பு தலைமையில் தீவிர விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை ஆலிவ் ரிட்லி (பங்குனி ஆமை) வகை ஆமைகள் குமரி மாவட்டக் கடற்கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். ஒரு ஆமை சராசரியாக 140 முதல் 170 முட்டைகள் வரை இடும். இந்த ஆண்டு லெமூர் கடற்கரை, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 6,504 முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆமை முட்டைகளைப் பாதுகாக்க நான்கு இடங்களில் பாதுகாப்புக் கூடங்களும், லெமூர் மற்றும் துவாரகாபதி பகுதிகளில் 3 பொரிப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து இதுவரை 1,448 ஆமை குஞ்சுகள் பொரிந்து வெளிவந்துள்ளன. அவை வனத்துறையினரால் பாதுகாப்பாகக் கடலில் விடப்பட்டன.
தற்போது கோடைக் காலம் என்பதால், எஞ்சிய முட்டைகளைப் பாதுகாக்கவும், புதிய முட்டைகளைச் சேகரிக்கவும் வனப்பணியாளர்கள் கடற்கரைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

