» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிளஸ்-1 மாணவர் மீது தாக்குதல்: சக மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 8:22:19 AM (IST)
சாத்தான்குளம் அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் பிளஸ்-1 மாணவரைத் தாக்கியதாக 5 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். சம்பவத்தன்று, இப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று வரும் வாலத்தூரைச் சேர்ந்த 16 வயது மாணவருக்கும், அதே பள்ளியில் பயிலும் சில மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீர் மோதலாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த 5 மாணவர்கள் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட மாணவரைச் சாதிய ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதுடன், அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துத் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆரம்பத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தட்டார்மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வீடியோ கால் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருமாவளவன் தரப்பிலிருந்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் வேலம்மாள் விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (PCR) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இது குறித்துச் சாத்தான்குளம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)


திருடன்Feb 24, 2026 - 12:05:27 PM | Posted IP 104.2*****