» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்காரத் தோரண நுழைவு வாயிலை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வருகை தந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த முதலமைச்சர், அங்கிருந்து கார் வழியாகக் குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அவருக்குக் கன்னியாகுமரி 'ஜீரோ பாயிண்ட்' பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பைத் தொடர்ந்து, கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களை அவர் நேரில் சந்தித்துச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்புப் பகுதியில் ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்காரத் தோரண நுழைவு வாயிலை' முதலமைச்சர் முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

