» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!

வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)



குளச்சல் ஆழ்கடல் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக, மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரை மீன் சீசன் காலத்திலும் போதிய வருமானம் கிடைக்காததால் மீனவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000-க்கும் அதிகமான வள்ளங்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை நம்பியுள்ளன. வழக்கமாக 10 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகள், பலத்த காற்று காரணமாகப் பாதியிலேயே கரை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கேரை மீன்களுக்கான சீசன் என்றாலும், நேற்று கரை திரும்பிய சில படகுகளில் மிகக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. கிடைத்த சொற்ப மீன்களை விற்றால், படகிற்குச் செலவு செய்த டீசல் காசு கூடக் கிடைக்கவில்லை" என மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் குளச்சல் துறைமுகப் பகுதியில் மீன்பிடி வர்த்தகம் தற்போது மந்தமான நிலையை எட்டியுள்ளது.


மக்கள் கருத்து

முன்னாள் மீனவன்Feb 19, 2026 - 07:12:35 PM | Posted IP 162.1*****

இது எல்லாம் எங்க போகுது ? ஏழை மக்களுக்கா? வெளிநாட்டுக்காரனுக்கா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory