» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

தூத்துக்குடியை, அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் கொண்ட சிறந்த மாநகராட்சியாக மாற்றும் நோக்கில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ஆணையர் பிரியங்கா மற்றும் பொறியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கடந்த 48 மாதங்களில் (சுமார் 4 ஆண்டுகளில்) ஆற்றிய சாதனைகள் குறித்து அவர் விரிவான அறிக்கை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான மழை வெள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் 10 செ.மீ மழை பெய்தாலும் 2 மணி நேரத்தில் தண்ணீர் வடியும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் கடலுக்குச் செல்ல 14 புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பக்கிள் ஓடை: 6 கி.மீ தூரத்திற்கு பக்கிள் ஓடை தூர்வாரப்பட்டு, கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கோரம்பள்ளம் குளம் முதல் கடல் வரை 12 கி.மீ தூர நீர் வழித்தடம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. மாநகரின் 60 வார்டுகளிலும் சாலை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தற்போது 420 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக 31 கோடியில் 600 புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. பிரதான சாலைகளில் 'எண்ட் டூ எண்ட்' முறையில் இருபுறமும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, தூசி மற்றும் மாசு இல்லாத சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு, தற்கால சாலை உயரத்திற்கு ஏற்ப 8-9 அடி ஆழத்தில் புதிய தரமான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மோட்டார் உதவி இன்றி இரண்டு மாடிகள் வரை குடிநீர் நேரடியாகச் செல்லும் அழுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை பசுமை நகரமாக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது: தற்போது 53 பூங்காக்கள் செயல்பாட்டில் உள்ளன. இது விரைவில் 206 பூங்காக்களாக உயர்த்தப்படும். தருவைகுளம் குப்பை கிடங்கில் 300 ஏக்கர் பரப்பளவு மரக்கன்றுகள் நடப்பட்டு 'பூஞ்சோலையாக' மாற்றப்பட்டுள்ளது.
நாள்தோறும் சேகரிக்கப்படும் 180 டன் குப்பைகளில் 120 டன் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மின் உற்பத்திக்கு அனுப்பப்படுகின்றன. நகராட்சி பகுதியில் தெருவிளக்குகளின் எண்ணிக்கை 21,759-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் 12 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடியை ஒரு சிறந்த முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவதே எங்கள் லட்சியம். இதற்கு பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

