» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!

வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்திற்கு மொத்தமாக ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது என்று வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நபார்டு (NABARD) தயாரித்த 2026–27 ஆண்டிற்கான கடன்திட்ட அறிக்கை (Potential Linked Credit Plan – PLP) மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மொத்தமாக ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கு ரூ.17,901.80 கோடி கடன் வாய்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதில் பயிர் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலுக்காக ரூ.13,545.97 கோடி, வேளாண்மை மற்றும் இணைத் துறைகளுக்கான காலவரையறை கடன்களுக்காக ரூ.3,063.01 கோடி, வேளாண்மை உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.1,044.34 கோடி மற்றும் துணைச் செயல்பாடுகளுக்காக ரூ.248.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறைக்கு ரூ.3,144.54 கோடி கடன் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் குருசாமி, ரிசர்வ் வங்கி (தலைமை மாவட்ட அதிகாரி) அன்பரசு அவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பாஸ்கரன், ஆவின் பொது மேலாளர் பாசு, துணைப்பதிவாளர் (பால்வளம்) சைமன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory