» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

வியாழன் 29, ஜனவரி 2026 5:12:53 PM (IST)


தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,இன்று (29.01.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர்தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதனடிப்படையில் ஊரகப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் எனவும், அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்தமிழ்நாடு சட்டப் பேரவையில் 24.01.2026 அன்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில்2025-2026 ஆம் ஆண்டில் கூடுதலாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கு 1000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இலவச பட்டா வழங்குதல் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் குக்கிராமம் மற்றும் அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பட்டையான் காலனி குக்கிராமங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனாதெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தோவாளை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், கருணாகரன், தோவாளை வட்டார உதவிப் செயற்பொறியாளர் கீதா,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணி மேற்பார்வையாளர்கள, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்மற்றும் ஊராட்சி செயலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory