» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக விநியோகம்: ஆட்சியர் ஆய்வு

திங்கள் 5, ஜனவரி 2026 4:48:37 PM (IST)



குமரி மாவட்டத்தில் குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகள்தோறும் விநியோகிக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலை கடைக்குட்பட்ட பகுதி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகள்தோறும் வழங்கி வருவதை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (05.01.2026) வழங்கி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3000/- சேர்த்து வழங்கப்படும் என ஆணை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுவால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,79,667 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 406 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் சேர்த்து 580073 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலைக்கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் அண்டை மாவட்டமான மதுரையில் கரும்பு விளைவிக்கப்படும் இடங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 08.01.2026 முதல் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது குடும்ப அட்டைதாரர்களின் வீடுகள்தோறும் நேரிடையாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்ஒருபகுதியாக இன்று, மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதற்கு கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து மேலகிருஷ்ணன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலை கடைக்குட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருவதையும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று குடிமைப்பொருட்களுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory