» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 12:26:10 PM (IST)
குமரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Derma Planning) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சிக்கான தகுதிகள்:
• விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Derma Planning) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.பயிற்சிக்கான தகுதிகள்:
• விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
• 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
• வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
• வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பயிற்சி விவரங்கள்: இப்பயிற்சி மொத்தம் 90 நாட்கள் நடைபெறும். பயிற்சிகள் ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. பயிற்சியின் போது தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும்.
வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்: பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலமாகவே வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 18,000 முதல் ரூ. 25,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள தகுதியான நபர்கள், தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)

