» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)
கிழக்கின் லூர்து நகர்" என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, புதிய இரயில் சேவைகளைத் தொடங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாகச் சங்கத்தின் தலைவர்ஸ்ரீராம் தெற்கு இரயில்வே பொது மேலாளர் மற்றும் இரயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: மதுரை - புனலூர் இரயில் நீட்டிப்பு: தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை – புனலூர் விரைவு இரயிலை (16729/16730) திருச்சி மற்றும் தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் தென் தமிழகம் மற்றும் கேரளப் பகுதி மக்கள் நேரடியாக வேளாங்கண்ணி செல்ல வழிவகை ஏற்படும்.
புதிய சென்னை பகல்நேர இரயில்: வேளாங்கண்ணி வந்தடையும் மேற்கண்ட இரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி, வேளாங்கண்ணி – சென்னை தாம்பரம் இடையே புதிய தினசரி பகல்நேர விரைவு இரயிலை இயக்க வேண்டும். மேலும், மதுரை - சென்னை எழும்பூர் வாரமிருமுறை இரயிலை (22623/22624) தினசரி இரயிலாக மாற்ற வேண்டும்.
பெங்களூரு இரவுநேர இரயில்: கர்நாடகாவிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி, வேளாங்கண்ணி – பெங்களூரு இடையே புதிய தினசரி இரவுநேர விரைவு இரயிலைத் தொடங்க வேண்டும்.
வழிபாட்டு நேரங்களுக்கு முக்கியத்துவம்: வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெறும் முக்கிய வழிபாட்டு நேரங்களான காலை 9:00 (மலையாளம்), 10:00 (ஆங்கிலம்) மற்றும் நண்பகல் 12:00 (தமிழ்) ஆகிய நேரங்களைக் கருத்தில் கொண்டு இரயில் கால அட்டவணையை வடிவமைக்க வேண்டும்.
ஏற்கனவே வேளாங்கண்ணி கிளை இரயில் பாதை திட்டத்திற்குத் திருத்தல நிர்வாகம் நிதிப் பங்களிப்பு அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம், சாலைப் பயணத்தில் முதியவர்களும் குழந்தைகளும் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்க இரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!
திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)


