» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!
திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 58 -வது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின், 58-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் வேப்பமூடு மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்), ஆர்.செல்லசாமி (பத்மநாபபுரம்) ஆகியோர் முன்னிலையில் இன்று (01.06.2026) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: ‘கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி ‘மார்ஷல்" என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக ‘பெரியவர்" என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர், நீதிக்காக போராடிய நெஞ்சுரமிக்க தலைவர், நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர், தன்னலம் கருதாத தியாகச் செம்மல், மார்ஷல் நேசமணி 01.06.1968-ஆம் ஆண்டு தனது 73-ஆவது வயதில் காலமானார்கள். அன்னாரின் 58-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மார்ஷல் நேசமணி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட்சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மார்ஷல் நேசமணி அவர்களின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், மார்ஷல் நேசமணி அவர்களின் கொள்ளுப்பேத்தி குடும்பத்தினர், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் நவீன், மாதவன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)


