» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் பிரம்மாண்ட 'ரோடு ஷோ' நடத்தினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாகர்கோவிலில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட வாகனப் பேரணி நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தார்.
அங்கு அவருக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்குத் திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். இந்தப் பேரணியில் பிரதமருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒரே வாகனத்தில் இரு பெரும் தலைவர்களும் இணைந்து நின்றவாறு பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபோது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் "வாழ்க வாழ்க" என முழக்கமிட்டு மலர் மாரி தூவினர். பிரதமரின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. பேரணி நடைபெற்ற பாதையெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!
திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)


