» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி: இளம்பெண் மீது வழக்குப் பதிவு

புதன் 5, நவம்பர் 2025 5:38:12 PM (IST)

புதுக்கடை அருகே திருமணம் செய்து இளைஞரை ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி செய்ததாக இளம்பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின் (35). இவரும், முள்ளூர்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கேத்தரின் பிளஸ்சியும் (23) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். கடந்த 2023 இல் இரு வீட்டாருக்கும் தெரியாமல் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர், சுஜின் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். கேத்தரின் பிளஸ்சி பெங்களுரில் படிக்கச் சென்றார்.

இந்த நிலையில், கேத்தரின் பிளஸ்சி தனது அக்காவுக்கு திருமணம் முடிந்தால்தான் வீட்டில் எனது திருமணத்தைப் பற்றி பெற்றோரிடம் பேச முடியும். எனவே, அக்கா திருமணத்துக்கு பணம் தேவை எனக் கூறி சுஜினிடமிருந்து ரூ.12 லட்சம் பெற்றார். சிறிது நாள்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுஜின் இருவரும் சேர்ந்து வாழ பிளஸ்சியை அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார்.

தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த சுஜின், புதுக்கடை காவல் நிலையத்தில், தன்னை ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி செய்ததாக பிளஸ்சி மீது அண்மையில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதியவில்லை. இதையடுத்து அவர், குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் புதுக்கடை போலீசார் கேத்தரின் பிளஸ்சி மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory