» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!

வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)



பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றி வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பா,ஜ,க, மகளிர் அணி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன், பெண்களை இழிவாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் கட்சியில் பதவி  வழங்கி உள்ள திமுக பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.

இதில் மாவட்ட தலைவர் கோபகுமார், மாவட்ட பொருளாளர், டாக்டர் முத்துராமன் ,மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory