» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் தற்கொலை முயற்சி!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)
மதுரைக்கு போட்டிக்கு அழைத்து சென்றபோது 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கன்னியாகுமரி அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப். ராமன்புதூர் பகுதியில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி மையத்தின் கீழ் பணியாற்றி வருகிறார். மேலும், தனது நண்பரான யோகா மாஸ்டர் உதவியுடன் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பகுதி நேரமாக டேக்வாண்டோ பயிற்சி அளித்து வருகிறார். இது தவிர டேக்வாண்டோ போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை வெளியூர்களுக்கு அழைத்து செல்வதும் வழக்கமாம். அதன்படி கடந்த 11, 12ம் ஆகிய தேதி மதுரையில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் அமைப்பு நடத்திய டேக்வாண்டோ போட்டிக்கு குமரியில் இருந்து பள்ளி மாணவிகளை பிரதீப் அழைத்து சென்றுள்ளார். அப்போது, பெற்றோருடன் வந்த மாணவிகளை அனுப்பிய பிரதீப், தனியாக வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை மட்டும், மதியம் மற்றொரு மேட்ச் இருப்பதாக கூறி தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
அப்போது மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தாக தெரிகிறது. பின்னர், மாணவியுடன் குமரிக்கு திரும்பினார். மதுரையில் இருந்து வந்த பின்னர் மாணவி சரியாக சாப்பிடாமல், பிரமை பிடித்தது போல் இருந்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி மாணவி அழுதுள்ளார்.
இதனால், அதிர்ச்சிஅடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை அறிந்த பிரதீப் பயத்தில் தற்கொலைக்கு முயன்று, ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடம் மதுரை என்பதால், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

இரட்டைக்கரை கால்வாயில் ஆட்சியர் பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளைத் தடுத்துக் கண்காணிக்க உத்தரவு!
வெள்ளி 12, ஜூன் 2026 11:18:08 AM (IST)

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)


