» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:25:03 AM (IST)
நாகர்கோவிலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த தற்காலிக நகை மதிப்பீட்டாளரைப் போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், வடசேரி டென்னிசன் சாலையில் இயங்கி வரும் அந்த வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் (46), தனது கண்காணிப்பில் உள்ள வங்கிக் கிளைகளில் ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.வங்கியின் தற்காலிக நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்த கீழக்கல்குறிச்சியைச் சேர்ந்த ரகுவரன் (36), மற்றவர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து வங்கியின் முதன்மை மேலாளர் அளித்த புகாரின் பேரில், வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுவரனைத் தேடி வந்து இன்று கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60% வாக்குப்பதிவு: தொகுதி வாரியான முழு விவரம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கல்: 306 மது பாட்டில்கள் பறிமுதல்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:29:44 PM (IST)

தேர்வு முடிவு பயம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – பெற்றோர்கள் சோகம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:23:00 AM (IST)

