» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ் இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது இந்த நிலையில் ஒருவரிடம் லஞ்ச பணம் பெறும்போது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இன்று மாலை அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

