» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!

புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)

'மோந்தா' புயல் காரணமாக நாகர்கோவில் பெங்களூரு விரைவு ரயில் நாளை (அக்.30) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உரு வான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி ஆந்திர மாநிலத்தில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரை கடந்ததன் காரணமாக பலத்தகாற்று வீசியது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது. 

புயல் காரணமாக விமானங்கள், ரயில்கள் உட்பட பல்வேறு போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து நாளை (30ம் தேதி) இரவு 7.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -பெங்களூரு விரைவு ரயில் வண்டி எண்: 17236 'மோந்தா' புயல் காரணமாக முழுவதுமாக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory