» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் தொடர் கஞ்சா வேட்டையில் காவல்துறை: 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது!

திங்கள் 26, மே 2025 10:04:06 AM (IST)



கன்னியாகுமரி  மாவட்டத்தில் சுசீந்திரம் அருகே கஞ்சா வழக்கில் 6பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி  மாவட்டத்தில் கஞ்சா, குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். பள்ளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ராகுல்(20) மற்றும் ஆனந்த் என்பவரின் மகன் வளன்மேஸ்லினோ (19), நாகர்கோயில் பகுதியை சேர்ந்த வேலாயுதம் பிள்ளை என்பவரின் கணேஷ் ராஜா (19), வடசேரி பகுதியை சேர்ந்த முத்து குமார் என்பவரின் மகன் ஆறுமுகம் (24),கிருஷ்ணன்கோவில்  பகுதியை சேர்ந்த இராதாகிருஷ்ணன்  என்பவரின் மகன் மகேஸ்வர் (22) மற்றும் விஜயன் என்பவரின் மகன் சூரிய (22) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory