» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)
ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இவர் புதிய வீடு ஒன்றை கட்டுவதற்காக கட்டட வரைபட அனுமதி கேட்டு ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகன் என்பவர் தானே செயல் அலுவலர் என நடித்து கட்டட வரைபட அனுமதி வழங்க கடந்த 26 ஆம் தேதி ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபின் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவினர் ஐந்தாயிரம் ரூபாய் ரசாயனம் பூசிய பணத்தை சுபினிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து இன்று 28-05-2025 மாலை 4 .15 மணிக்கு செயல் அலுவலராக நடித்த பில் கலெக்டர் முருகனிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான போலீசார் பாய்ந்து சென்று பிடித்தனர். தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
புதன் 28, மே 2025 8:47:25 AM (IST)

நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்: தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. கைது!
புதன் 28, மே 2025 8:43:36 AM (IST)

பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் பயன் பெற சுகாதாரத்துறை அழைப்பு
செவ்வாய் 27, மே 2025 5:48:58 PM (IST)
