» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீடு புகுந்து சிறுமியை தாக்கியதாக ஆட்டோ டிரைவர் கைது

வெள்ளி 16, மே 2025 11:01:32 AM (IST)

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனா்.

குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன்-ஜெயலட்சுமி (45). இவா்களது மகள் சௌபா்ணிகா (11), நட்டாலம் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா்களது பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ் (37). 2 நாள்களுக்கு முன்பு செளபா்ணிகாவை சதீஷின் 11 வயது மகள் அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்து சதீஷிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளாா். சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் வெளியே சென்றநிலையில், வீட்டில் சௌபா்ணிகா மட்டும் இருந்துள்ளாா். 

அப்போது சதீஷ் சென்று சிறுமியிடம் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுமியை பெற்றோா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தனா். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory