» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)
முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் 19 வயது கடந்த பின்னரும் முதிர்வுத்தொகை பெறதாவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில்," தமிழ்நாடு அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18 வயது நிறைவடைந்து 19 வயது கடந்த பின்னரும் விண்ணப்பங்கள் பெறப்படாமல் நிலுவையில் உள்ள முதிர்வுத்தொகையானது தமிழ்நாடு மின்விசை நிதிநிறுவத்தால் அரசின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையினை சம்பந்தப்பட்ட பயனாளிகளை கண்டறிந்து அவர்களை விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயது நிறைவடைந்து 19 வயது கடந்த பின்னரும் முதிர்வுத்தொகை வேண்டி இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகள் கீழ்கண்ட ஆவணங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குழந்தையின் வைப்புத்தொகை இரசீது, பாஸ்போட் அளவு புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கி கணக்கு புத்தக நகல், வகுப்பு சான்றிதழ் (Community Certificate), பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அலுவலக முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்புக் கட்டிடம்,
தரைத்தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில்.
தொலைபேசி எண்.04652-278404
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)


.gif)