» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

சனி 26, ஏப்ரல் 2025 4:56:58 PM (IST)



தோவாளை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (26.04.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பிரசவ முன்கவனிப்பு பகுதி, பின்கவனிப்பு பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து அங்கு தாய்மார்களிடம் வழங்கப்படும் மருத்துவசிகிச்சைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மருத்துவமனையில் வளமிகு வட்டார திட்டத்தின் கீழ் பிரசவ வார்டு பகுதியில் தாய்மார்களுக்கும் அவர்களுடன் துணைக்கு இருப்பவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவமனையில் புதிதாக அமையவுள்ள அறுவை அரங்கிற்கான ஆயத்த பணிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிப்பட்டது. 

மேலும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் இம்மருத்துவமனையை நாடி வரும் கர்பிணிப்பெண்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கவேண்டும் எனவும், கர்பிணிப்பெண்கள் மற்றும் உடன் இருப்போரிடம் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும், இங்கு நடைபெறும் பிரசவங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும எனவும், ஆபத்து அறிகுறி காணப்படும் கர்ப்பிணி தாய்மார்களை பிரசவ தேதிக்கு முன்பாகவே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும எனவும், பிரசவித்த தாய்மார்களுடன் துணைக்கு இருக்கும் ஒருநபருக்கு மருத்துவமனை உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து இறச்சகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறச்சகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 11 உறுப்பினர்கள் 170 லிட்டர் பால் வழங்கி வருகிறார்கள். சங்கத்தின் பால் உற்பத்தியை அதிகரித்து ஆவினுக்கு அதிக அளவில் பால் வழங்கவும், பால் உபபொருட்கள் விற்பனை செய்யவும், உறுப்பினர்களுக்கு தேவையான கறவை மாட்டுக்கடன்கள் பெற்று வழங்கவும், மாட்டுத்தீவனம் மற்றும் தாதுஉப்புகலவை தட்டுப்பாடின்றி வழங்கவும் கூட்டுறவு சங்க செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

தொடர்ந்து உறுப்பினர்களுக்கு தேவையான கடன் வசதி மற்றும் இடுபொருள்களுக்கான தேவையினை பூர்த்தி செய்து பால் உற்பத்தியினை அதிகரிக்குமாறு அறிவுறுத்தினார்கள். சங்கங்களிலிருந்து ஆவினுக்கு 10000 லிட்டர் பால் உடனடியாக பெறப்படவேண்டுமென இலக்கு நிர்ணயித்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் அனைத்து சங்கங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை நிலையத்தினை உடனடியாக துவங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கால்நடை துறை மற்றும் இதர தொடர்புடைய துறைகளுடன் இணைந்து உறுப்பினர்களுக்கான சேவைகளை தங்குதடையின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் தோவாளை வட்டத்திற்குட்பட்ட வெள்ளமடம் குலசேகரன்புதூர் பகுதியில் ரூ.3.79 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கட்டடத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும், உறுதித்தன்மை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து ஒடுத்தளத்தின் தரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

நடைபெற்ற ஆய்வில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியளார் முருகேசன், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், கன்னியாகுமரி ஒன்றிய பால் கூட்டுறவு சங்க பொது மேலாளர் மகேஷ்வரி, வட்டார மருத்துவ அலுவலர், ஒன்றிய பால் கூட்டுறவு சங்க அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory