» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளங்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி : கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை!

புதன் 23, ஏப்ரல் 2025 4:01:54 PM (IST)



குமரி மாவட்டத்திற்குட்பட்ட குளங்களை தூர்வாரி அகலப்படுத்துவது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நீர்வளத் ஆதாராத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (23.04.2025) ஆட்சியர் அலுவலக குறள் (சிறு) கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா,  தெரிவிக்கையில்- அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 6 நீர்நிலைகளும், தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 52 நீர்நிலைகளும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 239 நீர்நிலைகளும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 99 நீர்நிலைகளும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 233 நீர்நிலைகளும், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 95 நீர்நிலைகளும் என மொத்தம் 724 நீர்நிலைகள் உள்ளன. 

அதில் 443 நீர்நிலைகள் பொதுப்பணித்துறை (நீர்வளம்) கீழும், 234 நீர்நிலைகள் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளிலும், 47 நீர்நிலைகள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ளன.

நமது மாவட்டத்திற்குட்பட்ட குளங்களை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் வாயிலாகவும், மீதமுள்ள சிறுபாசனங்களை அரசு நிதி மற்றம் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் வாயிலாகவும் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தூர்வாருவதன் மூலம் ஊரக பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.

மேலும் இப்பணிகளை மேற்கொள்வதால் பேரிடர் காலங்களில் அதிகளவில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வருவதை தடுக்கவும் வழிவகை செய்கிறது. மேலும் இதுபோன்ற நீர்நிலைகளை அடிக்கடி கண்காணிக்க பொதுப்பணித்துறை, நீர்வளத்ஆதாராத்துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து நீர்நிலைகளில் உள்ள குப்பைகள், புதர்களை அகற்றி நீர்வழித்தடங்களை சீரமைக்க வேண்டும். 

அனைத்து வட்டாட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை மழைக்காலங்களின் போது நீர்வரத்தினை கண்காணித்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு அனைவரும் இணைந்து ஜேஜிபி உள்ளிட்ட இயந்திரங்களின் வாயிலாக நீர்நிலைகள், நீரோடைகளில் உள்ள குப்பைகளை துரிதமாக அகற்றி தூர்வார வேண்டும் என துறை அலுவலர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள ஏரி குளங்களில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மண் உரிய அளவில் மட்டும் எடுத்து பயன்படுத்துமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து குளங்களையும் தூர்வாரி, நீர்நிலைகளை அகலப்படுத்துவதோடு, பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரவேண்டுமென தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளிஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், உதவி இயக்குநர்கள் இராமலிங்கம் (பேரூராட்சிகள்), சிதம்பரம் (ஊராட்சிகள்), இணை இயக்குநர் வேளாண்மை ஜெங்கின் பிரபாகர், அலுவலக மேலாளர் சுப்பிரமணியம், வட்டாட்சியர்கள் முருகன்(அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), ஜீலியன் ஹூபர் (விளவங்கோடு), ராஜசேகர் (கிள்ளியூர்), கந்தசாமி (திருவட்டார்), ஜாண் கெனி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory