» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி

வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

சிறந்த படிப்பாளிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திருநெல்வேலியில் உள்ள சட்டக் கல்லூரியைப் பயன்படுத்திக் கொள்ளவும் என அமைச்சர் ரகுபதி பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நாகர்கோவில் தொகுதி பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, " கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

இன்று ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று சென்னையிலும், மதுரையிலும் இருக்கும் 2 பெண் நீதிபதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படியும் படித்து முன்னேறி விடுவார்கள். அதனால் எந்த விதமான கவலையும் கிடையாது. எந்த இடத்தில் பார்த்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், படித்தவர்களாக வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

கன்னியாகுமரியிலும் ஒரு தனியார் சட்டக் கல்லூரி உள்ளது. ஆனால் அங்கு கட்டணம் அதிகம் என்று சொன்னீர்கள். நெல்லையில் அரசு சட்ட கல்லூரி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என்பது அரசின் கொள்கைதான். ஆனால் அது கொள்கை அளவில் இருக்கிறதே தவிர, நிதிநிலையின்படி அதை நிறைவேற்ற இயலாத சூழலில் இருக்கிறோம். நிதி நிலைமை சரியானால் நிச்சயமாக எல்லா மாவட்டங்களுக்கு சட்டக் கல்லூரி கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory