» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா ஏப்.28-ம் தேதி துவக்கம்!

சனி 26, ஏப்ரல் 2025 11:06:05 AM (IST)



குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா வரும் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா வரும் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் 9 ம் நாள் திருவிழாவான, மே மாதம் 6 ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மே 7 ம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு சித்திரை சபை மண்டபத்தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

நிகழ்ச்சியில் ஊர் தலைவர்கள் வட்ட பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத், தெற்கு மண் மடம் ஸ்தானிகர் ஆதிசேஷன் நம்பூதிரி தலைமையில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனிதுளசி தரன் நாயர், ராஜேஷ், சுந்தரி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷியா, கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர் குழுவினர், பக்தர்களும் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory