» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)

தூத்துக்குடியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இன்று 9வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 300 பெண் ஊழியர்கள் என சுமார் 1350 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சி ஒப்பந்த ஊழியா்களைப் போன்று ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. 

எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்துள்ள நிா்வாகத்தைக் கண்டித்து கடந்த 17ஆம் தேதி இரவு முதல் என்டிபிஎல் ஒப்பந்த ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக என்டிபிஎல் நிா்வாகத்துடன் தொழிற்சங்கத்தினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று 9 வது நாளாக என்டிபிஎல் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக அனல்மின் நிலையத்தில் சுமார் 750 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 21 தற்காலிக ஊழியர்கள் மட்டும் ஆலைக்குள் செல்ல போராட்ட குழுவினர் அனுமதி அளித்துள்ளதாகவும், இப்போராட்டம் விரைவில் மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் அப்பாத்துரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory