» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 11:44:50 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜேஜே விளம்பர ஏஜென்சி நிறுவன உரிமையாளர் ஜெபக்குமார் அளித்த மனுவில் "தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வியாபாரத்திற்கு பயன்பெறும் வகையில் (ஊர்) மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி எல்லையில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு அனுமதி மூன்று நாளைக்கு வழங்கப்படுகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பாக காவல்துறை அனுமதியுடன் மட்டும் விளம்பர பலகை 10x10 அனுமதிக்கப்பட்டது. தற்போது கார்ப்ரேசன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே மாவட்டம் முழுவதும் 20x50, 100x10, 25×50 என  அளவுக்கு மீறி பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. 

இதற்கு மாநகராட்சியிடமும், காவல்துறையிடமும் அனுமதி பெறுவதில்லை. முன்பு கம்பு, மரப்பலகை டிஜிட்டல் பேனர்களை அமைத்தனர். தற்போது இரும்பு கம்பி பேனர்கள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக மின்சாரம் செல்லும் இடம், போக்குவரத்து இடையூறு, கல்லூரிகள், மத வழிபாடு தளங்கள் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாத கணக்கில் போர்டுகள் இருக்கின்றன. 

கோவில்பட்டியில் பேனர்கள் ஜாதி ரீதியாக, கட்சி ரீதியாக, மதங்கள் ரீதியாக ஏராளமான பேனர்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் போட்டியில் மற்றவர் விளம்பர போடுகளை மறைத்து கட்டப்படுறது. இதற்கு தீர்வு காண காவல் துறையினர் பேனர் அமைக்கும் நிறுவனங்கள், பந்தல் தொழில் செய்துவரும் நிறுவனங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

இது தான்Apr 25, 2025 - 06:17:30 PM | Posted IP 172.7*****

MBA படித்த முட்டாள்களின் துட்டு பிசினஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory