» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் மீண்டும் பள்ளம் : வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:21:10 PM (IST)

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி - நெல்லை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள், கடந்த 2004ம் ஆண்டு தொடங்கியது. ரூ.234 கோடி மதிப்பீட்டில் நடந்த இந்த பணிகள், கால தாமதம் காரணமாக கூடுதலாக ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு 2012ல் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 4 வழிச்சாலையில் நெல்லை - தூத்துக்குடியை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைக்கிறது.
ஆனால் கட்டப்பட்ட 5 ஆண்டிற்குள் 2017ம் ஆண்டு பாவத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது. பாலத்தின் உறுதித் தன்மை குறித்த கேள்வி எழுந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டையில் கான்கிரீட் கலவை போடப்பட்டு போக்குவரத்து துவங்கியது. இதுபோல் பல முறை ஓட்டை விழுந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆற்றுபாலத்தில் 13 கோடி மதிப்பில் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதன் பின்னர் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று போக்குவரத்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா ஏப்.28-ம் தேதி துவக்கம்!
சனி 26, ஏப்ரல் 2025 11:06:05 AM (IST)

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

இதுApr 24, 2025 - 08:55:02 PM | Posted IP 172.7*****