» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனு தள்ளிவைப்பு

வியாழன் 24, ஏப்ரல் 2025 11:04:39 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிகாரிகளின் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை 3 மாதங்களுக்குள் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜோய்மாலா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரிக்க இருந்தது. நேரமின்மை காரணமாக விசாரணையை ஏப்ரல் 30-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

நன்றிApr 24, 2025 - 08:58:29 PM | Posted IP 162.1*****

போராட்டத்தில் ஈடுப்பட்ட போராளீஸ் சொத்தையும் தோண்டி எடுங்க ஆபீசர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory