» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!

சனி 3, மே 2025 12:41:52 PM (IST)



தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோவானை மலர் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கூடாரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (03.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குகென பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை வழங்கி வருகிறார்கள்.

அதன்ஒருபகுதியாக தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்திப்பெற்ற தோவாளை மலர் சந்தையினை மேம்படுத்தும் வகையிலும், மலர்கள் விற்பனை செய்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும், பாதுகாப்பு தன்மையுடன் மலர்களை விற்பனை செய்ய தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் கீழ் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று ரூ.2.12 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இப்பணியினை இம்மாத இறுதிக்குள் முடித்து, மலர் விற்பனையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துணை இயக்குநர் வேளாண் விற்பனை அலுவலர், செயற்பொறியாளர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தோவாளை வட்டாரத்துக்குட்பட்ட வீர மார்த்தாண்டபுரம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளை ஆட்சியர் நேரில் சந்தித்து, குறைகள் மற்றும் வாழ்வாதாரத்தினை கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசால் திருநங்கையர்களுக்காக வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உடனுக்குடன் வழங்க வேண்டுமென வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுகளில் துணை இயக்குநர் கீதா (வேளாண் விற்பனை), தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory