» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு

வெள்ளி 2, மே 2025 3:52:00 PM (IST)



குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மாணவர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாணவர்களிடம் மனுக்களை பெற்று, தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது 12ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி சேர இருக்கின்ற மாணவர்கள், தாங்கள் உயர்கல்விக்கு சேர்வதற்கு தேவையான சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அது சார்ந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று நடைபெற்ற மாணவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாணவர்களிடமிருந்து ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம், முகவரி திருத்தம், தொலைபேசி எண் இணைத்தல், பிறப்பு சான்றிதழ்களில் பெயர் திருத்தம், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், EWS சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், குடும்ப அட்டை, தமிழ்வழி சான்றிதழ் உள்ளிட்டவைகள் வேண்டி கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் தங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தேர்வு முடிவு வந்தபின் கல்லூரிகளில் சேர்வதை கவனத்தில் கொண்டு செயல்படும்போது சான்றிதழ்கள் பெறுவதில் தங்கள் காலங்களை விரயம் பண்ணாமல் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாணவர்களும் மேற்கொண்டால் கல்லூரிகளில் சேர்வது எளிமையான ஒன்றாக அமைந்துவிடும். 

மாணவர்களுக்கு தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும். எனவே 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக்அப்துல் காதர், தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக்அப்துல் காதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிக்கல்வி சராதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory