» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன விழா
வியாழன் 24, ஏப்ரல் 2025 10:54:41 AM (IST)

செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் 119வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழா நடந்தது.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் 119வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழாவை முன்னிட்டு ஏப்.20 மற்றும் 21ல் கன்வென்ஷன் கூட்டங்கள் நடந்தது. 22ம் தேதி காலை சிறப்பு உபவாச ஜெபம், மாலை பண்டிகை ஆயத்த ஆராதனை நடந்தது. 23ஆம் தேதி காலை பண்டிகை மற்றும் திரு விருந்து ஆராதனை நடந்தது. குப்பாபுரம் சேகர தலைவர் செல்வின்ராஜ் சார்லஸ் செய்தி அளித்தார். அன்று மாலை அசன விருந்து வழங்கும் நடந்தது.
இந்நிகழ்ச்சியை செபத்தையாபுரம் சேகர குரு இம்மானுவேல் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். எஸ்.டி.கே. ராஜன், ஜெபச்சந்திரன், எஸ்.டி. அருண் ஜெபக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் ஆலய பொருளாளர் பிரகாஷ் ராஜ்குமார், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங் ராஜ், சபை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், சாந்த சீலன், சாந்த சிங், எமில் டேவிட் சோபன் பாலசிங், ஆபிரகாம் அரவிந்தராஜ், அருண் தேவதுரை ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள், சபை மக்கள், செபத்தையாபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
SathyaApr 24, 2025 - 12:50:54 PM | Posted IP 162.1*****
Thapu
SathyaApr 24, 2025 - 12:50:53 PM | Posted IP 162.1*****
Thapu
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா ஏப்.28-ம் தேதி துவக்கம்!
சனி 26, ஏப்ரல் 2025 11:06:05 AM (IST)

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

sivathayapuramApr 25, 2025 - 04:27:18 PM | Posted IP 172.7*****