» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு CAT தேர்வு : உதவித் தொகையுடன் உயர்கல்வி தொடர அழைப்பு

புதன் 23, ஏப்ரல் 2025 12:04:04 PM (IST)

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு HCL - Tech Bee நிறுவனம் வழங்கும் தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கான CAT தேர்வு ஏப்.29, 30ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2024 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு HCL Tech - Bee திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் 29-04-2025 மற்றும் 30-04-2025 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இத்தேர்வினை எழுதலாம். 

https://registrations.heltechbee.com என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்திடல் வேண்டும்.  மாணவர்கள் பதிவு செய்த தங்கள் விண்ணப்பத்தினை PDF ஆக 6382998925 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு IIT - G. IIIT-K, BITS, PILANI, AMITY, SASTRA போன்ற பல்கலைகழகங்களில் உதவித் தொகையுடன் உயர்கல்வி தொடர இது ஓர் அரிய வாய்ப்பு.
 
மேலும் தொடர்புக்கு பாலசுப்பிரமணியம் – 8939579849 மற்றும் கௌதம்- 6382998925 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் மற்றும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியரையும் தொடர்பு கொள்ளலாம். எனவே அனைத்து விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,   தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory