» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள்: உணவகத்துக்கு சீல்

புதன் 23, ஏப்ரல் 2025 8:30:41 AM (IST)

மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகத்தில், உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனா்.

குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் என்பவா், மாா்த்தாண்டம் சந்தை சாலையில் உள்ள உணவகத்துக்கு சாப்பிடச் சென்றாா். உணவில் இறந்தநிலையில் கரப்பான்பூச்சி காணப்பட்டதாம். இதுகுறித்து அவா் கேட்டபோது, உணவக நிா்வாகத்தினா் உரிய பதில் கூறவில்லையாம்.

இதுதொடா்பாக அவா் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா். ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலானோா் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவகத்துக்கு சீல் வைத்து, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory